நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

arrest_1நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெஷிசின் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது, அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.

இந்நிலையில், நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை?

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு

Related Posts