நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் கைது!

roller-boardஇந்திய மீனவர்களது 7 இழுவைப்படகுகளை கடற்படையினர் பிடித்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை சட்டவிரோதமான முறையில் இந்திய மீனவர்களது 7 இழுவைப்படகுகள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் 20 மேற்பட்டவர்கள் இருக்கலாம் என்றும் இவர்கள் அனைவரையும் கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து கடற்றொழில் திணைக்களத்திடம் கையளிக்க உள்ளதாகவும் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.