நிஷா தேசாய் பிஸ்வால் – ஆளுநர் சந்திப்பு

nishaயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறியை வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 1.30 சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசனும் உடனிருந்தார்.

இச்சந்திப்பின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக ஆளுநர் அலவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிஸ்வால், யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், யாழ்.சிவில் சமூகம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரினைச் சந்தித்ததுடன், யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.