நிருபரின் உயிரை காப்பாற்றிய அஜித்!

அஜித்தின் உதவி செய்யும் பண்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ajith-thala

அதே போல் சமீபத்தில் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்று அவரை மீண்டும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது.மூத்த சினிமா நிருபர் ஒருவர் சென்ற மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினர்.

ஆனால் அவர்கள் கேட்கும் பணம் அந்த நிருபரிடம் இல்லை, உடனே இந்த செய்தி எப்படியோ மானேஜர் வழியாக அஜித்திடம் சென்றுள்ளது.அஜித், அந்த நிருபரின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

அதுமட்டுமல்ல, அந்த நிருபரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்று சொல்லியதோடு, தன் உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை அட்வான்சாக அந்த மருத்துவமனையில் கட்டிவிட்டார். இதை அறிந்த நிருபர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.