நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி தொடர்கிறது போராட்டம்

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

இந் நிலையில் வைத்தியசாலையின் நோயாளர்களுக்கான சேவைகள் கடந்த இரண்டு வார காலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் நோயாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது குறித்து இன்று காலை அடக்கு முறைக்கெதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா தொண்டர்களை சந்தித்து வினவிய போது த்ங்களுடைய அமைப்பினரும் தொண்டர்களோடு இணைந்து போரட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பொது மக்களைப் பாதிக்கும் வண்ணம் எவ்வித செயற்பாட்டையும் முன்னெடுக்க தொண்டர்கள் தயாராக இல்லை. எங்களுக்கு ஆதரவு வழங்க விரும்பினால் வைத்தியசலைக்கு வெளிப் பகுதியில் இதை முன்னெடுக்கலாம் என தொண்டர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கு மட்டும் தமது போரட்டம் தொடரும் என தொண்டர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.