நாவற்குழியில் வாகன விபத்து!- நால்வர் படுகாயம்

accidentயாழ்ப்பாணம் நாவற்குழிப் பாலத்தடியில் டாடா வடி வாகனமும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மேதிக் கொண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

டாட்டா வடியில் பயணித்த மன்னார் வாசிகள் நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் டாடா வடி வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.