நாட்டில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவானது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21ஆவது மரணம் பதிவாகியுள்ளது.

வெலிசற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர், இரத்த அழுத்தம் மற்றும் சுவாச அமைப்பு நோய்த் தொற்றுகள் நிலைமையின் காரணமாக கடந்த 23ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலாவது பி.சி.ஆர். பரிசோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை.

அத்தோடு, 31ஆம் திகதி உயிரிழந்த பின்னர் பிரேத பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதிப்பில் இவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor