நாட்டின் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மூடப்படும்; கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று முதல் மூடப்படுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யூலை 4ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பினை மேற் கொண்டு வருகின்றனர். கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவதும் மாணவர்களிடையே ஒழுங்கை பேணுவதிலும் சிரமத்திற்குரியதாக இருந்தது
இன்று  துணைவேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலைந்துரையாடியதன் விளைவாக  உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசநாயக்கா இந்த அறிவிப்பை பல்கலைக்கழக 16ம் இலக்க சட்ட வரைமுறைக்கமைவாக மேற்கொண்டிருப்பதாக தெரியவருகிறது.மீண்டும் ஆரம்பிக்கும் திகதி பின்னர் அறியத்தரப்படும் என உயர்கல்வி அமைச்சு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை பகிஷ்கரிப்பினை விடுத்து கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு யாழ். பல்கலை மாணவர்கள் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததுடன் இது குறித்து ஜனாதிபதிக்கும் மகஜர் ஒன்றினை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.