நயினாதீவு நாகவிகாரை, நாகபூசணி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி விஜயம்!

நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாகவிகாரை மற்றும் நாகபூசணி அம்மன் கோவில் என்பவற்றின் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

nay

தீவகத்திற்கு நேற்றய தினம் (14) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலில் நயினாதீவிற்குச் சென்றார்.

முதலில் நாகவிகாரைக்கு சென்ற ஜனாதிபதி பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், தேரர்களிடம் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

இதேபோன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உடனிருந்தனர்.