நயன்தாராவின் காதல் கதையில் இரண்டு படங்கள்!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து பிரபலமானவர் நயன்தாரா. அதன்பிறகு தெலுங்கிலும் கொடியேற்றினார். என்றாலும், கோலிவுட்டே அவரது பிரதானமாகி விட்டது. சமீபகாலமாக கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு அவரது மார்க் கெட் எகிறி நிற்கிறது. இதனால் நயன்தாரா நடித்தால் அந்த படம் ஹிட் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நேரத்தில், நயன்தாராவின் காதல் கதைகளை மையப் படுத்தி இரண்டு படங்கள் கோலிவுட்டில் உருவாகியுள்ளன. ஒன்று சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு இந்த படத்தில் அவர்கள் இருவரும் காதலித்த காலத்தில் நடந்த பல சம்பங்களை படமாக்கியிருக்கிறாராம் பாண்டிராஜ். என்றாலும், அது எதையுமே கண்டுகொள்ளாமல் ஒரு நடிகையாக அந்த படத்தில் நடித்துள்ளாராம் நயன்தாரா.

அதேபோல், பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு இரண்டாவதாக ஏற்பட்ட காதலைப்பற்றிய கதையில் காந்தா என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபுதேவாவே நாயகனாக நடிக்க, ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்த படத்தில் பிரபு தேவாவை நயன்தாரா திருமணம் செய்து கொள்ள இருந்ததையும் பின்னர் அவர்கள் பிரிந்து வந்த காரணங்கள் பற்றிய சில விசயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.

ஆக, பிரபுதேவா-நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளயிருந்த கடைசி தருணத்தில் அவர்கள், பிரிந்து விட்டதற்கான காரணங்கள் பலவாறாக சொல்லப்பட்டாலும், இந்த காந்தா படம் உண்மையை உள்ளபடி சொல்லிவிடும் என்கிறார்கள்.