நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி முறைப்பாடு!!

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையை சேர்ந்த சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் பண மோசடி முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார்.

குறித்த பெண்ணிடம் நடிகர் பிரசாந்த் ரூ.10 இலட்சம் பண மோசடி செய்திருப்பதாக கூறி பாண்டிபஜார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சதி என்றும் பிரசாந்த் தரப்பு விளக்கம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறும் இரசிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்ணின் முறைப்பாடு தொடர்பில் எந்தவிதமான ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.