நடிகர் சங்க கிரிக்கெட் போட்டிக்கு விஜய் வராததற்கு இது தான் காரணம்!!

இளைய தளபதி விஜய் எந்த நடிகருக்கு பிரச்சனை என்றாலும் முதலில் வந்து நிற்பவர். ஆனால், நேற்று நடிகர் சங்க நலனுக்காக நடந்த கிரிக்கெட் போட்டியில் விஜய் கலந்துக்கொள்ளததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுக்குறித்து விசாரிக்கையில், நடிகர் சங்கம் தரப்பில் இந்த போட்டிக்கு அழைப்பு விடுத்த போது விஜய், ‘கண்டிப்பாக வர முயற்சி செய்கிறேன்’ என கூறியுள்ளார்.

ஆனால், தற்போது தான் தெறி படம் ரிலிஸாகியுள்ளது, படம் பல சிக்கலினால் சில இடங்களில் ரிலிஸாகவே இல்லை, இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதிலேயே விஜய் தற்போது தீவிரம் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாகவே விஜய்யால் வர முடியவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.