தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை யாழ்ப்பாணத்திற்கு மாற்றம்

thuraiyappa_jaffnaஇலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

துரையப்பா விளையாட்டரங்கிலேயே இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் பரீட்சார்திகளின் போக்குவரத்து நிலமை மற்றும் தங்குமிட வசதி போன்றவற்றை கருத்தில்கொண்டே பரீட்சைக்கான இடம்மாற்றப்பட்டுள்ளது.

இந்த பரீட்சையில் தோற்றவுள்ள வடக்கை சேர்ந்த பரிட்சார்த்திகள் குறித்த பரீட்சையை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறு விடுக்கபட்ட வேண்டுகோளை அடுத்தே இப்பரீட்சை கொழும்பிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பரிட்சைக்குத் தோற்றும் யாழ்.மாவட்ட பரீட்சார்த்திகள் மெய்வன்மைச்சங்க தலைவர் செயலாளருடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ளும்படி யாழ்.மாவட்ட மெய்வன்மைச்சங்கத்தின் தலைவர் ஆர்.ரமணன் அறிவித்துள்ளார்.

இந்த பரீட்சை கொழும்பில் கடந்த சனிக்கிழமை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor