தே.அ. அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க நடவடிக்கை!

NIcதேசிய அடையாள அட்டையை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பதற்கான நடைமுறையொன்றை கொண்டுவருவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு ஒத்ததாக 10 வருடங்களுக்கு ஒரு முறை அடையாள அட்டையை புதுப்பிக்கும் நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக தமது புதிய தகவல்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை அடையாள அட்டையில் உள்ளடக்குவதற்கான வாய்ப்பு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor