தேர்தலின் போது விசேட தேவையுடையவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு

handycapமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, விசேட தேவை உடையவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

விசேட தேவை உடையவர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வாக்களிக்க செல்ல முடியாத நிலை காணப்பட்டால், இதற்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அத்துடன் விசேட தேவை உடையவர்கள் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக உறுதிப்படுத்தும் வைத்திய அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.