தேசிய அடையாள அட்டை பெற வடக்கில் 11,647பேர் விண்ணப்பம்

NIcதேசிய அடையாள அட்டை பெறுவதற்காக வட மாகாணத்திலிருந்து 11,647பேர் விண்ணப்பித்துள்ளனர். வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையின் போதே இத்தனை விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக பப்ரல் அமைப்பு தெரிவித்தது.

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஊடாக வடக்கில் அடையாள அட்டை வழங்குவதற்கான நடமாடும் சேவையை பப்ரல் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.

கடந்த இரண்டு மாதங்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடமாடும் சேவையின் போது 11,647பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று அவ்வமைப்பு குறிப்பிட்டது.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் 4,272 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 786 பேரும், யாழ் மாவட்டத்தில் (01.07.2013ஆம் திகதிவரை) 6,589 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்த 786 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டதாக பப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டது.