தென்மராட்சியில் படையினர் பயன்பாட்டிலிருந்த காணிகள் மற்றும் வீடுகள் மக்களிடம் கையளிப்பு

தென்மராட்சி பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டில் 17 வருடங்களாக இருந்த 29 ஏக்கர் காணியும் 10 வீடுகளும் நேற்றய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

Mahintha-haththurusinge

எழுதுமட்டுவால் பிரதேசத்தில் நேற்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டு காணி மற்றும் வீடுகளை உரிமையாளர்களிடம் கையளித்தனர்.

1996 ஆம் ஆண்டு தொடக்கம் தென்மராட்சி பிரதேசத்தில் கெற்பலி, மந்துவில், சங்கரத்தை, வரணி, எழுதுமட்டுவால் ஆகிய பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் 17 வருடங்களுக்கு பின்னர் 53 பேரிடம் மீளக்கையளிக்கப்பட்டுள்ளன