Ad Widget

திலீபனின் தியாகம் அதி உன்னதமானது: சம்பந்தன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் – உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது.

திலீபனின் தியாகத்தை எவரும் கொச்சைப்படுத்த முடியாது. நினைவேந்தல் நிகழ்வுக்கு எவரும் தடை போட முடியாது.

தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் நின்று திலீபனை நினைவேந்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts