திருநெல்வேலியை அழகுபடுத்தும் இராணுவம்

திருநெல்வேலிச் சந்தையை அழுகுபடுத்தும் நடவடிக்கையில் திருநெல்வேலி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முதற்படியாக திருநெல்வேலி சந்தைக்கு அருகில் உள்ள சிறிய நிலப்பரப்பில் பூங்கா அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்காகத் தனியார்களிடமிருந்து மரக்கன்றுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து, திருநெல்வேலிச் சந்தைக் கட்டிடத்தையை துப்பரவு செய்து அழகுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இதேபோன்றதொரு அழகுபடுத்து நடவடிக்கையை, நெல்லியடிப் பகுதி இராணுவத்தினரால், நெல்லியடிப் பகுதியிலுள்ள பொதுஇடங்களில் அழகுப்படுத்தும் நடவடிக்கை கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts