தம்பிராசாவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கடந்த 16ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று மதியத்துடன் முடிவுக்குவந்தது.

thambirasa

யாழ். மாவட்ட செயலகம் முன்பதாக இடம்பெற்ற இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களுமான சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து மென்பானம் வழங்கி முடித்து வைத்தனர்.

மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபருடன் நடாத்திய பேச்சுக்களை அடுத்து அதற்கான கால அவகாசமொன்றினை மேலதிக அரச அதிபர் கோரியதை அடுத்தே தனது உண்ணாவிரத போராட்டத்தை தம்பிராசா கைவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தம்பிராசா மீது கழிவொயில் வீச்சு

தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் உண்ணாவிரதம்

நிவாரணங்களை மீள வழங்குமாறு கோரி தம்பிராசா உண்ணாவிரதத்திற்கு முஸ்தீபு