தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடை; யாழில் நீரியல் வளத்துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் புதிதான அமைக்கப்பட ஐஸ் கட்டித் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு மக்கள் எந்தக் காலப்பகுதியிலிரும் தெற்குடன் இணைந்தே இருப்பவர்கள் வட மாகாணத்தில் வீதி, குளம், வீடுகள் மற்றும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கலாம் ஆனால் அங்கு வாழும் மக்கள் எதிர் பார்க்கும் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் வடக்கிலே வாழ்ந்தவர்கள் அபிலாசைகளுக்காக தான் போராடினார்கள்,ஆகாவே இதனை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்

எனவே தான் இறப்பதற்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க தன்னாலான அனைத்து செயற்ப்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும்

எனினும் அடுத்த சந்ததி ஒன்றிற்கு இப் பிரச்சனை நீண்டு செல்வதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் தானாக தோன்றவில்லை தெற்கிலே காணப்பட்ட இனவாதத்தால் தான் அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தினார்கள்.

அத்துடன் இனவாதிகளை தான் தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றார்கள், இன்றும் தமிழ் மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு தெற்கிலுள்ள இனவாதிகள் தடையாக இருக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.