தமிழ், சிங்களத்தில் வியாழன், ஆங்கிலத்தில் Wednesday: அறிவுறுத்தல் பலகையால் குழப்பம்!

கஸ்தூரியார் வீதியில் வாகன சாரதிகளுக்காக வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பலகையில் தமிழ் சொல்லிற்குரிய ஆங்கிலப் பதம் ( வியாழன்-wednesday) வேறுபட்டுக் காணப்படுவதனால் தாம் சிரமப்படுவதாக வாகனச் சாரதிகள் தெரிவித்தனர்.கஸ்தூரியார் வீதி ஒருவழிப் போக்குவரத்துப் பாதையாக மாற்றப்பட்ட பின்னர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வீதியின் இரு மருங்கிலும் வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்பட்டு ஒரு பக்கம் மட்டும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாநகரசபை செய்துள்ளது.

அதன்படி வாரத்தில் ஞாயிறு தவிர்ந்த 3நாட்கள் ஒரு பக்கத்திலும் 03 நாட்கள் மறு பக்கத்திலும் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், எந்த நாளில் எந்தப் பக்கம் வாகனங்களை நிறுத்துவது என சாரதிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவுறுத்தல் பலகையிலேயே மேற்படி ( வியாழன்-wednesday) ஆங்கிலப் பதம் தவாறகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் எந்த நாளில் வாகனங்களை நிறுத்தவேண்டும் எனத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பத்தில் உள்ளதாக சாரதிகள் தெரிவித்தனர்.