அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 22 நாட்களாக இவர்கள் உணவை தவிர்த்து வரும் நிலையில், இரண்டு கைதிகளுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக விசாரணையில் இருந்த தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷன், சுலக்ஷன் மற்றும் திருவருள் ஆகிய மூவரும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழர் தாயகத்தில் மாத்திரமன்றி, தென்னிலங்கையிலும் கடந்த சில நாட்களாக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.