தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் 25ஆம் திகதி

sangary-anandaதமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி நேற்றய தினம் தெரிவித்தார்.

இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.

நாச்சிமார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் யாழ். மாவட்ட காhரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.