தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றச்சாட்டின் பேரில் 3 மாதகால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று அவரை நேற்றிரவு இரவு அவரது வீட்டில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதான நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor