தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர்.

Saravanabavan _sara -mp

ஜனாதிபதி மகிந்தவுக்கும், அரசாங்கத்திற்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதமே ஈ.பி.டி.பியினர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

நேற்று பி.ப 3மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தினால் மூளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரசாத் அரங்கில் 2014ஆம் ஆண்டிற்கான வாணிவிழா நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

வடக்கு,கிழக்கு போர்ச் சூழ்நிலையில் பின்தள்ளப்பட்டுள்ளது.இன்று இலங்கையில் 28வீதம் முல்லைத்தீவிலும், 19வீதம் கிளிநொச்சியிலும்,22வீதமும் மன்னாரிலும்,19வீதம் மட்டக்களப்பில் என தமிழர் வாழும் பிரதேசங்கள் அதிகளவிலானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்ற பிரதேசங்களும் மற்ற பிரதேசங்களுக்கு சமமாக ஆக்க வேண்டும்.நாட்டின் தலைவருடைய கடமை அனைத்து பிரதேசங்களுக்கும் சமமாக அபிவிருத்தியை முன்னெடுப்பதே.ஆனால் நாட்டின் தலைவர் ஜனாதிபதி மகிந்த தமிழர்,சிங்களவர் என பாரபட்சம் பார்க்கின்றார்.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இணக்க அரசியல் பேசிக் கொள்ளும் டக்ளஸ் தேவானந்தா அவர் குறிப்பிடுகையில்,எத்தனையோ மில்லியன் அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு சந்திரகுமார் குறிப்பிடுகின்றார் 9,10,11,12,13,14 ஆம் ஆண்டினை கூட்டி ஒரு பெருந் தொகையினை காட்டுகின்றார்.

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருக்கிறது.தமிழ் மக்களை பின்னடைவைச் செய்வதற்கான வழிவகைகளையும் செய்கின்றனர்.

மேலும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த முறை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் புதிதாக முன்மொழிந்தார் அவர்களுக்கு 2500 சம்பளம் வழங்கப்பபோவதாக ஆனால் வடக்கு மாகாண சபையும் அவர்களுக்கு ஏற்கனவே 2500 சம்பளமாக வழங்கி வருகின்றது அவரும் தற்போது வழங்கவுள்ளார்.ஏனென்றால் இது தேர்தலுக்கான வரவு செலவு திட்டம் காரணம் முன்பள்ளி ஆசிரியர்களின் வாக்குகளும் ஜனாதிபதிக்கு தேவை என்பதே ஆகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிற்கான வழிகள் யாவும் முடக்கப்பட்டு விட்டன. வடக்கு மாகாண சபை பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வங்கி என்ற உண்டு ஆனால் வடமாகாண சபைக்கு அந்த அபிவிருத்தி வங்கிக்கு அனுமதிக்கிறார்கள் இல்லை.அப்படி இருந்தால் புலம்பெயர் தமிழர்கள் இதனை பெற்று தமது இடங்களை அபிவிருத்தி செய்யலாம்.ஆனால் செய்ய முடியாத சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.