தனியார் பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதித்தள்ளிய தனியார் பஸ்ஸினுடைய வழித்தட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும்படி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற இந்த விபத்தில் நாவாந்துறை சூரியவெளியை சேர்ந்த மீனவரான நிக்கிலஸ் டொமினிக் (வயது 42) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதன் முதற்கட்டமாக குறித்த பஸ்ஸின் வழித்தட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளேன்.

அத்துடன், தனியார் பஸ்களில் இடம்பெறும் அசௌகரியங்கள் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் செய்யுமிடத்து அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

மினி பஸ்ஸில் சிக்கி குடும்பஸ்தர் சாவு