தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் – மோடி

தனது பிறந்த நாளை, கொண்டாட வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

modi

இதற்கு பதிலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு நிவாரண பணிகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தொண்டர்களுக்கும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் பொருட்டு தமது பிறந்த நாளை இந்த முறை கொண்டாட வேண்டாம் என அறிவித்துள்ள மோடி, அதன்பொருட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் எதிர்வரும் 17ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.