ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

gg-ponnambalam

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவுனரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தின நிகழ்வுகள் குருநகரில் இன்று காலை நடைபெற்றன.

இந்த நிகழ்வுக்குயாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட்,சயந்தன் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த துணிச்சலும் பற்றுறுதியும் மிக்க அரசியல் போராளியாக வாழ்ந்த மனிதர் என நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் தெரிவித்தனர்.