ஜி.வி.பிரகாஷ் படத்தில் ஜீவா

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் எம்.ராஜேஷ்.

gv-jeeva

அதன் பிறகு இவர் இயக்கிய அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தன.

தன்னை மீண்டும் வெற்றிப்பட இயக்குநராக நிரூபிக்கும்வகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை இயக்கி வருகிறார்.

‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் யாராவது ஒரு பிரபல நடிகர் கேமியோ ரோலில் நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் இப்போது ராஜேஷ் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கிறார்! அவர் வேறுயாருமல்ல, ராஜேஷின் முதல் பட ஹீரோவான ஜீவாதான்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கம் மூலம் அதிகாரபூர்வாக தெரிவித்துள்ளார் ஜீ.வி. பிரகாஜ்குமார். ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அவரது ஆஸ்தான நாயகியான ஆனந்தியும், டார்லிங் நாயகியான நிக்கி கல்ராணியும் நடிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor