ஜனாதிபதி தேர்தல் குறித்த த.தே.கூ.வின் தீர்மானம் தாமதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

TNA-logo

ஜனநாயக மக்கள் முன்னணியுடன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கூட்டமைப்பின் தலைமைத்துவம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கில் இனவாதத்தை மேற்கொள்ளும் எவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது என்றும் இது தொடர்பில் தமிழ்த் தலைவர்களை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த கலந்துரையாடலின் போதே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், நாட்டின் பொரளாதார நிலைமை உள்ளிட்ட தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியன தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்தது.