ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம் – சுகாதார அமைச்சர்

அடுத்த வருட ஆரம்பம் முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கையில் தடுப்பூசி அட்டை உடன் வைத்திருத்தலை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்களுக்கு சிறப்பு செயலி (ஆப்) மற்றும் QR குறியீட்டு எண் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

தடுப்பூசி அட்டையின்று பொது இடங்களுக்குள் நுழைய மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு மீறி அனுமதி வழங்கினால் உரிய இடங்களின் நிர்வாகவே பொறுப்பு கூற வேண்டும்.

உதாரணமாக தடுப்பூசி அட்டை இன்றி ஒருவர் திரையரங்கிற்குள் பிரவேசித்தால் அதற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி போடாமல் இருப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

எனவே, பூஸ்டர் தடுப்பூசியைப் போல் முழு தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor