‘ஜனவரியில் கோவிட்-19 புதிய அலை உருவாகும் அபாயம்’!!

பண்டிகைக் காலங்களில் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் வைரஸ் வேகமாகப் பரவுவதைக் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் போதும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என அதன் செயலாளர், மருத்துவர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவர் செனல் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் ஜனவரி மாதத்திற்குள் கோரோனா வைரஸ் வேகமாகப் பரவும்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை அடுத்து, கவனக்குறைவான பொது நடத்தை காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருந்தனர்

பண்டிகைக் காலங்களில் கோரோனா வைரஸை பொதுமக்கள் அலட்சியப்படுத்தினால் அது புதிய அலைக்கு வழிவகுக்கும் என்றார்.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒமிக்ரோன் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் முயற்சியில், தடுப்பூசி வழங்கலுக்குத் தேவையான அனைத்து தடுப்பூசி அளவையும் பெறுவதும் பொதுமக்களை வழிநடத்துவதும் அரசின் பொறுப்பாகும்.

நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய உள்ளூர்வாசி ஒருவருக்கு ஓமிக்ரோன் மாறுபாடு தொற்றிக் கொண்டதைப் போலவே, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூலம் எந்தவொரு புதிய வகையும் நாட்டிற்குள் நுழைகிறது.

இதேபோன்ற வழிகளில் நாட்டிற்குள் நுழையும் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

நாட்டுக்குள் வருபவருக்கு பரிசோதனையில் தொற்று இருந்தால், வைரஸின் மரபணு வரிசைமுறையை நடத்த போதுமான ஆதாரங்களை சுகாதார அமைச்சுக் கொண்டிருக்க வேண்டும்.

நாட்டிற்குள் நுழையும் மாறுபாடுகளைக் கண்டறிவதற்காக, இந்த வசதிகள் அந்த இடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor