‘செம டென்ஷனில்’ விஜய்

ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்களால் விஜய் டென்ஷனில் உள்ளாராம்.

vijay-new

ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படத்தை ரிலீஸ் செய்ய படாதபாடு பட்டார்கள். இந்நிலையில் அவர் தற்போது நடித்துள்ள கத்தி படத்திற்கு தயாரிப்பாளர் உருவத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்க ஜெயா டிவி முன் வந்தது. ஆளுங்கட்சி டிவியிடம் படம் செல்வதால் பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று நிம்மதியாக இருந்தார்கள். இந்நிலையில் தான் அவர்களின் நிம்மதி கெடும் வகையில் அந்த தகவல் வெளியானது.

கத்தி படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்கும் முடிவை தள்ளிப் போட்டு வைத்துள்ளது ஜெயா டிவி என்று செய்திகள் வெளியாகின.

இத்தனை பிரச்சனை இருக்கையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்ததை இனிப்பு கொடுத்தும், பட்டாசுகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

29-1411979012-dmk-sweets-6000

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் தயாரித்த கத்தி படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை கொண்டாடியுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை தனது ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடியது விஜய்க்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம்.

பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு மட்டும் அல்லாமல் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என விஜய் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டது போன்று யாரோ ஃபேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனால் விஜய் செம டென்ஷனில் உள்ளாராம்.