யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் யி ஸியாங்லியாங் உள்ளிட்ட குழுவினர், யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனை மாவட்டச் செயலகத்தில்
இன்று செவ்வாய்க்கிழமை (14) சந்தித்துக் கலந்துரையாடினர்.
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடவடிக்கைகள் தொடர்பில், மாவட்டச் செயலாளரிடம் சீன தூதுவர் கேட்டறிந்தார்.
அபிவிருத்தித் திட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தும் போது, அதற்கு உதவத் தயாராகவிருப்பதாகவும் சீன தூதுவர் கூறினார்.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில், தூதுவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.