இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையுடன் நட்புறவைப் பேணிவரும் சீன அரசாங்கமானது, இதுவரைகாலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பைத் தவிர்த்தே வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சீனா தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்திருப்பது முக்கியம் வாந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.