சிவகார்த்திகேயன் படப் பாடல்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெமோ’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் செவிலியர் வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார். ஏற்கெனவே, அனிருத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களான ‘ரெமோ நீ காதலன்’, ‘செஞ்சிட்டாளே’, ‘சிரிக்காதே’ ஆகிய பாடல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டது.

இந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ‘ரெமோ’ படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் ‘ரெமோ’ படத்தின் பிற பாடல்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, நள்ளிரவு 12 மணியளவில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து பாடல்களும் இணையதளங்களில் ஒலிக்கத் தொடங்கின. முந்தைய பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது மற்றைய பாடல்களும் கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர்.

இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் உள்ளிட்ட பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தை வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related Posts