சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. தொடர்ந்து வைத்தியசாலையில்

uthayan _epdpயாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது ஊடக இணைப்பாளர் எஸ்.ஜெயதீபன் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி.யின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில்வெஸ்திரி அலன்ரின் எம்.பி. பயணித்த வாகனம் கிளிநொச்சிக்கும் மாங்குளத்துக்கும் இடையில் ஏ – 9 வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

இதன்போது சில்வெஸ்ரர் அலன்ரின் எம்.பி.யின் மகன், மகள், வாகனச் சாரதி, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor