சிறையிலிருந்து திரும்பிய ஜெயலலிதாவிற்கு, ரஜினிகாந்த அனுப்பிய கடிதம்!

திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவர், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

rajini_jayalalitha

அந்தக் கடிதத்தில், “நீங்கள் போயஸ் கார்டனுக்குத் திரும்பியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது நல்ல நேரத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.உங்களது உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும் எப்போதும் வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று அந்தக் கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.