சிறுவர்களுக்கான பாதுகாப்பு ஓய்வுதிய திட்டம்

life insurance 3யாழ். மாவட்டத்தில் சிறுவர்களுக்கான ‘பாதுகாப்பு’ ஓய்வுதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட அதிகாரி ச.பிரதீபன் தெரிவித்தார்.

1 முதல் 18 வயது வரையான சிறுவர்களுக்கான இவ் ஓய்வுதிய திட்டத்தில் தேசிய சேமிப்பு வங்கியில் சுமார் சிறுதொகை பணத்தினை மாதாந்தம் வைப்பிலிடப்பட வேண்டும்.

அவ்வாறு வைப்பிலிடும் பணத்திற்கான வட்டி வீதம் மற்றும் பணத்தினை இலங்கை பாதுகாப்புச் சபை மாற்றி அதை சிறுவர்களுக்கான ஓய்வுதிய திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இத்திட்டத்தில் சிறுவர்கள் தமது ஓய்வு நிலை வயதினை எட்டியவுடன், தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பிலிட்ட பணத்தினையும், வட்டி வீதத்தினையும், மாதாந்த ஓய்வுதியமாக 40 ஆயிரம் ரூபா வரை இலங்கை சமூக பாதுகாப்பு சபை வழங்கும் என்றும், இந்த ஓய்வூதியம், வயோதிப நிலையை அடைந்து இறக்கும் காலம் வரைக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதியம் போன்று வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.