சிம்பு -நயன்தாரா காதலுக்கு இடையில் வரும் டாப்சி!

முன்னாள் காதல் ஜோடியான சிம்பு -நயன்தாரா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ஜோடி சேர்ந்ததால் மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்த்து விட்டதாகவும், இதனால் ஹன்சிகா – சிம்பு காதல் முறிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

idhu-namma-aalu

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், இப்படம் குறித்தான எதிர்பார்ப்புகளை இது போன்ற தகவல்கள் கூட்டத்தான் செய்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, தற்போது இப்படத்தில் டாப்சியும் இரண்டாவது நாயகியாக இணைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு டாப்சி அளித்த பதிலில், ‘ உண்மை தான். ஆனால், இன்னும் அந்தப் படத்தில் நான் ஒப்பந்தமாகவில்லை. ஏனெனில் நான் எனது மற்ற பட வேலைகளில் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இத்தகவலை பாண்டிராஜ் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது வெறும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் டி.ஆரின் இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/taapsee-between-simbu-nayanthara-206107.html#slide765387

Recommended For You

About the Author: Editor