சிஞ்சார் மலையில் மதிப்பிடப்பட்டதை விட குறைவான யாசிதிகளே எஞ்சியுள்ளனர்

வடக்கு இராக்கில் சிஞ்சார் மலைப்பகுதிக்கு தப்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை மீட்கும் தமது நடவடிக்கைக்கான வாய்ப்புகள் அருகிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

sinjar_yazidi_refugess

முன்னர் மதிப்பிடப்பட்டதை விட, அந்த மலைப் பகுதியில் குறைந்தளவான யாசிதி இன மக்களே இன்னும் சிக்கியிருப்பதாக இராணுவ கண்காணிப்பொன்றில் தெரியவந்துள்ளது.

அந்த மலைப்பகுதியில் தங்கியிருந்தவர்களுக்கு உணவும் குடிநீரும் கிடைத்துள்ளதாகவும், எதிர்பார்க்கப்பட்டதை விட நல்ல நிலைமையில் அவர்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிஞ்சார் மலைப்பகுதியில் இருந்து சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கும் வடக்கு இராக்கிய பகுதிக்கும் அனேகமான மக்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor