சாரதி தூங்கியதால் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய பஸ்!

வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி மரம் ஒன்றுடன் மோதியுள்ளது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பஸ் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தானது சாரதியின் கவனக்குறைவினாலும் நித்திரை தூக்கம் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts