சயனைட் கடித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில்

cyanideமனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சயனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருசுமதவடி, ஆணைக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டவேளை, கணவருக்கு சயனைட் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றி தனக்கு தெரியாதென்று கூறியுள்ளார்.

சயனைட் கடித்த குடும்பஸ்தர், சுயநினைவற்ற நினையில் இருப்பதனால் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவருக்கு நினைவு திரும்பியதும் சயனைட் எங்கிருந்து அவருக்கு கிடைத்தது என்பது பற்றிய விபரங்கள் திரட்டப்படும் என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor