சமையலடுப்பு வெடித்ததால் எரி காயங்களுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

சமையலடுப்பு வெடித்து சிதறியதால் எரியகாயங்களுக்குள்ளான இலக்காகிய பெண் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி சிவன்  கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

நேற்று மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தவேளை அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றும் போது சட்டையில் தீப்பற்றி உடல் வரை தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் கூக்குரலை கேட்ட அயலவர்கள் எரியகாயங்களுக்கு இலக்காகிய பெண்ணை சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.