சமாதானப் பயணம் யாழ்ப்பாணத்தை அடைந்தது

pathayaththerai-jaffnaதிபெத் நாட்டைச் சேர்ந்த ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய தேரர் ஜிக்மி பேமா வங்சன் தலைமையில் 6ஆம்திகதி கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பாத யாத்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இலங்கையில் உள்ள சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்கும் நோக்குடன் இந்த பாத யாத்திரை நடைபெற்றது. இப்பேரணியில் இருபத்து நான்கு நாடுகளைச் சேர்ந்த 270 சமாதான விரும்பிகள் மற்றும் பௌத்த துறவிகளும் பங்குபற்றியிருந்தனர்.

29 மார்ச் 2013 காலை இக்குழுவினர் கிளிநொச்சியை வந்தடைந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் , வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் ,வடமாகாண கலாச்சார அமைச்சின் செயலாளர் திருமதி. சிறீதேவி மற்றும் பல உயர் அதிகாரிகளும் இப்பாதயாத்திரைக் குழுவினரை வரவேற்றனர்.

29 மார்ச் 2013 மாலை யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை வந்தடைந்த இக்குழுவினரை தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் என்.யோகராஜா வரவேற்றார்.

Recommended For You

About the Author: Editor