சந்தானத்தின் காமெடிக்கு மீண்டும் கைதட்டல்!

சந்தானத்தின் காமெடி அலை ஓய்ந்து விட்டது. அவரது இடத்தை சூரி பிடித்து விட்டார் என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் கலர் கலராக ரீல் ஓடிக்கொண்டிருககிறது. குறிப்பாக, சந்தானத்திற்கு ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை பயன்படுத்தி சூரியின் அபிமானிகள் இதுபோன்ற செய்திகளை பரப்பி விட்டு வருகிறார்களாம்.

santhanam

ஆனால், பட்டையக் கிளப்பனும் பாண்டியா படத்தில் சூரி விதார்த்தை ஓவர்டேக் செய்து நடித்திருந்தபோதும் அந்த படம் தோல்வியடைந்து விட்ட இந்த நேரத்தில், சந்தானம் காமெடி பட்டையக் கிளப்பியுள்ள அரண்மனை படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

கதைப்படி ராஜாவின் இரண்டாவது மனைவியின் பேரனாக சொத்தில் பங்கு கேட்பது போன்று அரண்மனைக்குள் செல்லும் சந்தானம், அங்கு சமையல்காரனாக்கப்பட்ட படம் முழுக்க தனது ப்ராண்ட் காமெடிகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

கூடவே, காமெடிக்கு பேர் போனவரான டைரக்டர் சுந்தர்.சியின் கதையும், காட்சிகளும் சந்தானத்துக்கு கைகொடுத்திருப்பதால் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். இதனால் சந்தானம் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளிலுமே தியேட்டர்களில் கைதட்டல் காதை பிளக்கிறதாம்.

இதனால் இதே கைதட்டல் அடுத்தபடியாக நான் நடித்துள்ள லிங்கா உள்ளிட்ட மற்ற படங்களிலும் கேட்கும் என்று மீண்டும் காலரை தூக்கி விட்டுள்ள சந்தானம், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தையடுத்து சேதுவுடன் இணைந்து தான் நடித்துள்ள வாலிபராஜா மற்றும் நம்பியார், வாலு, நண்பேன்டா ஆகிய படங்கள் வந்தால் மீண்டும் தனது மார்க்கெட் எகிறும் என்று கூறி வருகிறார்.