சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

arrest_1சட்டவிரோத மின் பாவனையாளர்களெனக் கூறப்படும் 4 பேரை யாழ். பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

யாழ். நீதிவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 4 பேரை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பொலிஸாரும் இலங்கை மின்சார சபையினரும் இணைந்து நடத்திய சோதனையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மின்மானிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இந்த 4 பேரையும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை மாலை ஆஜர்படுத்தியபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.