சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான சலீம் திரைப்படம் வணிகரீதியில் வெற்றியடைந்தது. அப்படத்தை வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்றாலும், யாருக்கும் நஷ்டமில்லை.

vijay-antany

ஒரு சில ஏரியாக்களில் சலீம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் லாபம் பார்த்தனர்.

சலீம் படத்தை அடுத்து இந்தியா பாகிஸ்தான், திருடன், செய்தான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

அவற்றில் விஜய் ஆன்டனியின் நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் இந்தியா பாகிஸ்தான்.
இப்படம் வெளியான பிறகு பிச்சைக்காரன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஐந்து ஐந்து ஐந்து படத்தை அடுத்து சசி இயக்கும் படம் இது.

இப்படத்தை விஜய் ஆன்டனியே தயாரித்து, இசையும் அமைக்கிறார்.

தான் நடிக்கும் படங்களுக்கு வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, வித்தியாசமானமுறையில் தலைப்பு வைக்கும் விஜய் ஆன்டனிதான் இப்படத்திற்கு பிச்சைக்காரன் என்று டைட்டில் வைத்தாராம்.

பிச்சைக்காரன் படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
பிச்சைக்காரன் படத்தை தொடங்குவதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் படத்தை வெளியிட்டுவிடுவாராம்.