பூநகரி – சங்குப்பிட்டி பாலத்துக்குச் சமீபமாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி அம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபில்ராஜ்(வயது 26) என்ற குடும்பஸ்தரும் மாவத்தகமைவைச் சேர்ந்த பொலிஸார் ஒருவரும் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸாரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கதிரவேலு கபில்ராஜின் சடலம் சங்குப்பிட்டி கடலில் இருந்து மீட்கப்பட்டது. நேற்று காலை சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ஏ.ஆனந்தராஜ் சடலத்தை கிளிநொச்சி வைத்தயசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.